உக்ரைன் ரஷ்யா போர் – விண்ணை தொடும் கச்சா எண்ணெய் விலை..!!
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த சில தினங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உலக நாடுகள் சில ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதால், தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
புதன்கிழமை, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 111 டாலராக உயர்ந்தது. திங்கட்கிழமை ஒரு பீப்பாய்க்கு 98 டாலராக இருந்த விலை செவ்வாய்கிழமையன்று 102 டாலராக உயர்ந்துள்ளது. தற்போது, கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.
ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் காரணமாக IEA இலிருந்து எண்ணெய் வெளியிடப்பட்ட போதிலும் சந்தை குறைந்த விநியோகத்தில் ஈடுபடுகிறது, ஜூலை 2014-க்குப் பிறகு அதிகபட்சமாக இப்போதுதான் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு என்று கூறப்படுகிறது.