“ஜெட்சிந்தெசிஸ்” நிறுவனத்தில் ₹15 கோடி முதலீடு செய்யும் சச்சின் டெண்டுல்கர்!
மின்னணு பொழுதுபோக்கு மற்றும் தொழில் நுட்ப நிறுவனமான (digital entertainment and technology) ஜெட்சிந்தெசிஸ் (JetSynthesis) நிறுவனத்தில் சச்சின் டெண்டுல்கர் ₹15 கோடி சமீபத்தில் முதலீடு செய்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. இது சச்சினுக்கும், ஜெட்சிந்தெசிஸ் நிறுவனத்துக்குமான உறவை மேலும் வலுப்படுத்தும். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து கிரிக்கெட் சார்ந்த பல்வேறு விஷயங்களில் இயங்கும் ஒரு கூட்டு மின்ணனு நிறுவனத்தை “100MB” என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள். மேலும் சச்சின் சாகா கிரிக்கெட் சாம்பியன்ஸ் மற்றும் சச்சின் சாகா VR போன்ற மின்னணு விளையாட்டுகளும் அடங்கும்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களில் தேர்மேக்ஸ், யோஹன் பூனாவாலா க்ரூப், திரிவேணி க்ரூப் மற்றும் DSP க்ரூப் போன்ற மல்டி மில்லியன் குடும்ப நிறுவனங்களும் குறிப்பிடத்தக்கவை.
இது குறித்து சச்சின் கூறுகையில், “ஜெட்சிந்தெசிஸ் நிறுவனத்துடனான எனது உறவு துவங்கி 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. சச்சின் சாகா கிரிக்கெட் சாம்பியன்ஸ் எனும் “விர்ச்சுவல் ரியாலிட்டி” மொபைல் விளையாட்டு செயலியோடு துவங்கிய எங்கள் உறவானது, பின்பு 100MB எனும் கிரிக்கெட் தொடர்பான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய நிறுவனத்தோடு தொடர்ந்தது. உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, ஒரு தேர்வு செய்யப்பட்ட மிகச் சிறந்த விளையாட்டு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான் நாங்கள் இதைத் துவங்கினோம். இப்போது இது இன்னும் பல்வேறு துறைகளிலும், பொருட்களிலும் கவனம் செலுத்தும் ஒரு நிறுவனமாக மாறும்,” என்கிறார்.
ஜெட்சிந்தெசிஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை டெண்டுல்கரை மையமாகக் கொண்டு இயங்கும் “சச்சின் கிரிக்கெட் சாகா” விளையாடுபவர்களின் சிறந்த தேர்வாக இருக்கிறது. மேலும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி இருக்கிறது. இந்த வகை விளையாட்டுகளில் இது மிகவும் புகழ் பெற்றதாக விளங்குவதோடு ₹2 கோடி பயனாளர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இன்னொரு தளமான 100MB, நேரலையில் கிரிக்கெட் ஸ்கோர், சமூக விளையாட்டு தொடர்புகள் மற்றும் வணிகம், எளிமையான கிரிக்கெட் விளையாட்டுகள் மற்றும் வினாடி வினாக்கள் மூலம் பயனாளர்களோடு தொடர்பு கொண்டிருக்கிற ஒரு புகழ்பெற்ற தளமாக வளர்ந்து வருகிறது. “இந்த முதலீட்டின் மூலம், நாங்கள் சச்சினை “ஜெட்சிந்தெசிஸ்” குடும்பத்திற்குள் வரவேற்கும் போது எங்கள் கூட்டு மேலும் மேம்படுவது மட்டுமல்லாமல், எங்கள் தொழில் நுட்ப வலிமையைப் பயன்படுத்தி பிராண்ட் சச்சினை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது எங்கள் வளர்ந்து வரும் கிரிக்கெட் கேமிங் வணிகம் செங்குத்தாக வளர உதவும், மேலும் புகழ்பெற்ற பெயர்களும் இந்தக் கூட்டணியின் வளர்ச்சியை விரிவுபடுத்த உதவும்” என்று ஜெட்சின்தெசிஸின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜன் நவானி கூறினார்.
தற்போது, ஜெட்சின்தெசிஸ், மூன்று தனித்துவமான வணிகப் பிரிவுகளைக் கொண்டுள்ளது – கேமிங், டிஜிட்டல் பொழுதுபோக்கு மற்றும் ஆர்வத்தின் அடிப்படையிலான சமூக பண்புகள்.
“நாங்கள் பிற நாடுகளுக்குள் நுழைவதையும் திட்டமிடுகிறோம். தற்போது ஜெட்சிந்தெசிஸ் ஜப்பான், ஐரோப்பா, குறிப்பாக ஸ்கேண்டினேவியன் நாடுகளிலும், அமெரிக்காவின் சில பகுதிகளிலும் ஆசியாவிலும் காலூன்றி இருக்கிறோம். எங்கள் இலக்கு இந்த உறவை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், மெல்ல மெல்ல பல்வேறு நாடுகளுக்கு இந்த சந்தையை அறிமுகப்படுத்தி வளர்வது தான். எங்கள் தயாரிப்புகளையும், தளங்களையும் நோக்கி மேலதிக பயன்பாட்டாளர்களைக் கொண்டு வருவதும், கூடிய விரைவில் 500 மில்லியன் பயன்பாட்டாளர்களை அடைவதும் எங்கள் இலக்கு” என்கிறார் நவானி.
ஜெட்சிந்தெசிஸ் நிறுவனம் மொபைல் விளையாட்டுகளை உயர் நம்பகத்தன்மையோடும், இணையக் கூட்டிணைப்போடும் செய்வதில் புகழ் பெற்றது. மேலும் உலகலாவிய வெளியீட்டு விநியோகஸ்தர்களான WWE, Square Enix, Hollywood film Passengers மற்றும் Floyd Mayweather போன்ற நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. Nautilus Mobile நிறுவனத்தின் Real Cricket மொபைல் விளையாட்டை வாங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. திறமை அடிப்படையிலான மொபைல் கிரிக்கெட் விளையாட்டு பங்குதாரர்களோடு இணைந்து 120 மில்லியன் தரவிறக்கம் செய்யப்பட்டு 1.2 கோடி செயல்படும் பயனாளர்களைக் கொண்டுள்ளது ஜெட்சிந்தெசிஸ் நிறுவனம்.
மேலும் இந்த நிறுவனம் e-Sports நிறுவனமான Nodwin Gaming நிறுவனத்தின் இணை நிறுவனருமாகும். மேலும் நவீன தகவல் தொழில்நுட்ப இயங்கு தளங்களான AI, Blockchain, AR/VR/MR மற்றும் Quantum Computing போன்றவற்றில் சிறப்பாக செயல்படுகிறது. சமூக குழுக்களில் இயங்குவதற்காக 100 MB, ஜெட் சிந்தெசிஸ் உடன் இணைந்து தியானம் மற்றும் மனநலம் சார்ந்த ஒரு செயலியையும், சம்பள விநியோகம் மற்றும் தொழில்நுட்ப வணிகம் சார்ந்த “AnyDay Money” (சம்பள முன்பணம் போன்ற ஆதார் பூனாவாலா உடனான கூட்டு) செயலி, JobDost எனும், பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கும் செயலையே பல்வேறு நகரங்களிலும் அறிமுகம் செய்யும் திட்டங்களும் இப்போது நடைமுறையில் இருக்கிறது.
Credits: Rediff