சம்பள உயர்வு!! எவ்வளவு தெரியுமா?
அரசாங்கம் நடத்தி வந்த ஏர் இந்தியா நிர்வாகம் செயலிழந்து கிடந்த சூழலில் அந்நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கி நடத்தி வருகிறது. இந்த நிலையில் டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரு மணி நேரத்துக்கு பறக்கும் பைலட்டுகளின் சம்பளமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 700 ஏர் இந்தியா விமானிகளுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட இருக்கிறது. வெறும் விமானிகளுக்கு மட்டுமல்லாமல் விமானத்தில் பணியாற்றும் பிற ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 ஆயிரத்து 600 பணியாளர்களும் இதனால் பலனடைய இருக்கின்றனர். 70 மணிநேரம் பறக்கும் உத்தரவாதத்தை விமானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி விமானிக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாயும்,மூத்த விமானிகளுக்கு சம்பளமாக எட்டரை லட்சம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பணியாற்றும் கேபின் க்ரூ பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 25 ஆயிரம் ரூபாயும்,அதிகபட்ச சம்பளமாக 78 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் உள்ள 800 விமானிகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய பதவிகளையும் ஏர் இந்தியா நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரியில் கேபின் க்ரூவில் 4ஆயிரத்து200பேருக்கும் 900 விமானிகளுக்கும் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 470 போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களை வாங்கவும் ஏர் இந்தியா நிறுவனம் திட்டம் வகுத்துள்ளது.