ஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
ஒரு காலத்தில் மத்திய அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனம் அண்மையில் டாடா குழுமத்துக்கு கைமாறிய நிலையில், அதன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பைலட்களுக்கும் வருடாந்திர போனஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதியிட்டு இந்த சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் அந்த நிறுவனம் புதுப்பிக்கும் திட்டத்தில் 5 ஆண்டு திட்டத்தை அமல்படுத்தியது. டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா சென்ற பிறகு முதல் முறையாக சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது வரை 18 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பணியாளர்களின் திறமை மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு வெறும் ஒப்பந்தம் மற்றும் மறுசீரமைப்பு சம்பளம் மட்டுமே ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டது. விமானிகளின் திறனுக்கு ஏற்றபடி அவர்களுக்கான போனசும் அளிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தில் ஏர் இந்தியா , ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கனெக்ட் மற்றும் விஸ்தாரா ஆகிய விமானங்களை கொண்டுள்ளது.