ஐடிசி நிறுவன தலைவருக்கு சம்பள உயர்வு
ஐடிசி நிறுவனத்தின் தலைராகவும்,நிர்வாக இயக்குநருமாக சஞ்சீவ் பூரி என்பவர் இருகிறார்.இவருக்கு ஒரு ஆண்டு சம்பளமாக 16 கோடியே 30 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது கடந்தாண்டு வாங்கி வந்த 12 கோடியே 59 லட்சம் ரூபாயை விட 29.5 விழுக்காடு அதிகமாகும். சஞ்சீவ் பூரிக்கு அடிப்படை சம்பளமாக 2.88 கோடி ரூபாயும், திறமை அடிப்படையிலான சம்பளமாக 12.86 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.இவை தவிர்த்து இதற செலவுகளாக 57 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் சலுகைகள் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்தாண்டு ஜூலை 21ஆம் தேதி வரை தற்போதுள்ள பதவியில் இருக்க இருக்கிறார்.ஆனால் அவரின் பணிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க ஐடிசி நிர்வாகக்குழு கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவில் மற்ற நிறுவனங்களின் பாஸ்களுக்கு சம்பளம் குறைந்து வரும் சூழலில் புரியின் சம்பளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் மேத்தாவின் சம்பளம் 22 கோடியே 36 லட்சம் ரூபாயாக இருக்கிறது.இவருக்கு கடந்த 2021-இல் 15 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐடிசி குழும நிறுவனங்களில் இருந்து ஹோட்டல் வணிகத்தை மட்டும் தனியாக பிரிக்கும் முடிவுக்கான பணிகள் செய்துவரப்படும் நிலையில் பூரியின் திடீர் சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது.