சம்பளமா? எனக்கு வேண்டாமே… !!!
பிரபல டெக் நிறுவனமாக திகழ்கிறது இன்போசிஸ். இந்தநிறுவனத்தின் வெகு சில நிர்வாகிகள் மட்டுமே நிறுவனத்தில் எஞ்சியிருக்கின்றனர்.இன்போசிஸ் நிறுவனம் எப்படி இத்தனை வெற்றிகரமாக இருக்கிறது என்ற புள்ளி விவரங்களையும் சம்பள விவரத்தையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாரெக், தலைமைநிதி அதிகாரி நிலான்ஜன் ராய் சேர்மேன் நந்தன் நீலேகனி ஆகியோரின் சம்பளம் சார்ந்த விவரங்களும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாரெக்கின் சம்பளம் 21 விழுக்காடுகுறைந்துள்ளது. அதே நேரம் நீலேகனி தனக்கு சம்பளமாக எந்த பணமும் தேவையில்லை என்று எழுதிக்கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளம்,ஓய்வூதிய பலன்கள்,மொத்த சம்பளம் என எதுவுமே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் நந்தன் நீலேகனி
தற்போதுமக்கள் பயன்படுத்தும் ஆதார் அமைப்பின் தலைமை பொறுப்பிலும் 2009 முதல் 2014 வரை இருந்துள்ளார். கடும் பணவீக்கம்,உலகம் முழுவதும் ஏற்ற இறக்க சூழல் என பல சிக்கல்கள் இருந்து வந்தாலும்,இன்போசிஸ் நிறுவனம் தனது லாபமாக 7.8விழுக்காடு அதிகரித்து 6,128 கோடி ரூபாய் ஆக பதிவு செய்துள்ளது. கடந்த காலாண்டுடன் சேர்த்து நிறுவனத்தின் ஆண்டுக்கு ஆண்டு வருவாய் 16 விழுக்காடு அதிகரித்து 37,441 கோடி ரூபாயாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.