முடிவுகட்டிய சவுதி அரேபியா..
கச்சா எண்ணெயை அமெரிக்க டாலர்களில் விற்பது தொடர்பான 80 ஆண்டுகள் ஒப்பந்தத்தை சவுதி அரேபியா புதுப்பிக்காமல் நிராகரித்துள்ளது. 80 ஆண்டுகளாக டாலர்களில் வர்த்தகம் நடந்து வந்தாலும். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க டாலர்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க டாலர்களை மட்டும் நம்பாமல் பிற நாட்டு பணத்திலும் வணிகத்தை தொடர சவுதி அரேபியா முடிவெடுத்துள்ளது. சீன பணம்,யென், யூரோ, யுவான் மற்றும் டிஜிட்டல் பணங்களாக கருதப்படும் பிட்காயின்களையும் பயன்படுத்த சவுதி திட்டமிட்டுள்ளது. கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் பணத்தை தங்தத்துடன் சேர்க்காமல் அதற்கு பதிலாக பெட்ரோ டாலராக வர்த்தகத்தை தொடங்கியது. இந்நிலையில் அமெரிக்க டாலர்களுக்கு மாற்றாக மற்ற நாட்டு பணங்களையும் பயன்படுத்தும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் தயாராகி வருகின்றன. எம் பிரிட்ஜ் என்ற புதிய திட்டத்தின் மூலமாக, அமெரிக்க டாலர்களுக்கு மாற்றாக உள்ளூர் பணத்தை இரு நாடுகளுக்கு இடையே ஒரே நேரத்தில் பரிமாறிக்கொள்ள வசதி செய்யப்பட்டு வருகிறது. உலக பொருளாதார சூழல் மாற்றத்துக்கு சவுதி அரேபியாவின் இந்த நகர்வு மிகமுக்கியமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை வரும்நாட்களில்தான் பார்க்கவேண்டும்.