பலநூறு கோடிகளை முதலீடு செய்யும் சவுதி அரேபியா..
புதுப்பிக்கத் தக்க ஆற்றலை ஏற்படுத்துவதற்காக சவுதி அரேபியா பல நூறு ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்ய இருக்கிறது. மின்சார உற்பத்திக்காக இந்த தொகை செலவிடப்பட இருக்கிறது. இயற்கை எரிவாயுவால் இயங்கும் மின்சார ஆலைகளுக்கு இந்த முதலீடுகள் செய்யப்பட இருப்பதாக ACWA Powerநிறுவனம் தெரிவித்துள்ளது. காற்று, சோலார் மற்றும் எரிவாயுவால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்காக புதிய கட்டமைப்புகளை அந்நாடு உருவாக்கி வருகிறது.
குறிப்பிட்ட இந்த நிறுவனம் சவுதி அரேபியாவின் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் உற்பத்தியில் 70 விழுக்காடு பங்களிப்பை கொண்டுள்ளது. இது சார்ந்த கட்டுமானத் தொழிலையும் பொருளாதாரத்தையும் சவுதி தீவிரப்படுத்தி வருகிறது. சவுதியைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டுமின்றி மற்ற நாடுகளும் இதில் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய ஆசிய நாடுகள் மற்றும் சீனாவும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.பொருளாதாரத்தில் மந்த நிலையில் உள்ள சீனாவும் தங்கள் நாட்டில் வந்து முதலீடு செய்து வளர்ச்சி அடையலாம் என்றும் குறிப்பிட்ட நிறுவன மூத்த அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார். சவுதி அரேபியாவின் தென்மேற்கு கடற்கரையில் மிகப்பெரிய ஹைட்ரஜன் ஆலையை தயாரிக்கவும் சவுதி அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட நிறுவனம் சீனாவிலும் மின்சார உற்பத்தியை தொடங்க திட்டமிட்டு இருக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்த முதலீடுகள் செயல்பாட்டுக்கு வரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.