சேமிப்புக் கணக்குக் கட்டணங்களை உயர்த்தும் இண்டஸ் இண்ட் வங்கி !
ஜனவரி 1ந் தேதி முதல் இண்டஸ் இன்ட் வங்கி தனது சேமிப்பு கணக்கு கட்டணங்களை உயர்த்த உள்ளது. உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்திற்கான கட்டணம் டிசம்பர் 31ந் தேதி வரை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். ஆனாலும் இந்த திருத்தப்பட்ட கட்டணம் உங்கள் வழக்கமான சேமிப்புக் கணக்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
சேமிப்புக் கணக்கை சரிவர பராமரிக்காமல் இருப்பது, ரொக்க வைப்புத் தொகை, பணமின்றி காசோலை திரும்புதல், இலவச வரம்புகளுக்கு மேற்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை ஆகியவற்றுக்கு இந்த கட்டண மாற்றங்கள் பொருந்தும். சேமிப்புக் கணக்கில் மாதாந்திர மற்றும் காலாண்டுக்கு ஒருமுறை என்று இரண்டு சராசரி இருப்புக்கு வங்கி கட்டணங்களை வசூலிக்கிறது.
இதுவரை எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, இப்போது இண்டஸ் இன்ட் வங்கி என்று கட்டணங்களை உயர்த்திக் கொண்டே போகிறது. இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.