கூகுளில் தங்கத்தை தேடி..
தங்கம், இந்த வார்த்தைக்கும் மனிதர்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி தரவுகளின்படி எந்த ஊரில் அதிக தங்க படிமம் இருக்கிறது என்றும் எந்த நாட்டில் அதிக தங்கம் கையிருப்பு இருக்கிறது என்றும் 29,300 பேர் தேடியுள்ளனர். உலகளவில் தங்கம் கிடைக்கும் டாப் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தங்கத்தின் அளவு 804 டன்னாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் 16,280 பேர் தங்கத்தை கூகுளில் தேடியுள்ளனர். இதற்கும் அடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் 13380 தங்கத்தை தேடியிருக்கின்றனர். தங்கப்பத்திரம் குறித்து அமெரிக்காவிலும் நிறைய பேர் தேடியுள்ளனர். பிரிட்டன், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ஈடிஎஃப் திட்டங்களை மக்கள் தேடுகின்றனர். பல ஆண்டுகளாக தங்கம் உற்பத்தியில் சீனா முன்னணி நாடாக திகழ்ந்து வருகிறது. 375 டன் தங்கத்தை அந்நாடு சராசரியாக உற்பத்தி செய்து வருகிறது. தங்கம்,ஆபரணங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களை வாங்க சீனாவிடம் இருந்துதான் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.