SEBIயின் முதல் பெண் தலைவர் – மாதபி பூரி புச் நியமனம்..!!
பங்குச் சந்தை அமைப்பான செபியின் புதிய முதல் பெண் தலைவராக மாதபி பூரி புச் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி, செபியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான அஜய் தியாகியின் பதவிக் காலம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் அஜய் தியாகியின் பதவிக் காலம் 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், 2022 பிப்ரவரி 28-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், செபி அமைப்பின் புதிய தலைவராக மாதபி பூரி புச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், செபியின் முழுநேர உறுப்பினராக பணியாற்றி வந்த மாதபி பூரி புச், 1989-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் தனது பணியை தொடங்கினார். கார்ப்பரேட் ஃபைனான்ஸ், பிராண்டிங், நிதிப்பிரிவு, கடன் பிரிவு ஆகியவற்றிலும் பணிபுரிந்துள்ளார்.
2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஐசிஐசிஐ வங்கியுடைய பங்குச் சந்தை பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், பங்குச் சந்தை தொடர்பான பல்வேறு அமைப்புகளிலும் பணியாற்றிய அனுபவம் உடையவர்.