பங்குச்சந்தையில் பங்கேற்க கூடாது – அனில் அம்பானி அப்செட்..!!
Reliance Home Finance, அதன் தலைவர் அனில் அம்பானி மற்றும் 3 பேர் பங்குச்சந்தை உள்ளிட்ட செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டில் பங்கேற்க செபி(SEBI) தடை விதித்துள்ளது.
Reliance நிறுவனத்தின் தலைவர் திருபாய் அம்பானியின் இறப்புக்கு பிறகு, அவரது வாரிசுகள் முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் சமமாக சொத்துகள் பிரித்து தரப்பட்டது.
அனில் அம்பானியின் Reliance Power:
அந்த சொத்தை வைத்து அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
SEBI தடை:
இந்த நிலையில், அனில் அம்பானியின் Reliance Home Finance நிறுவனத்துக்கு பங்குச்சந்தை மற்றும் பாண்டு வெளியீடு உட்பட செக்யூரிட்டிஸ் சந்தைகளில் பங்கேற்க செபி தடை விதித்துள்ளது. மேலும், அனில் அம்பானி, அமித் பாப்னா மற்றும் ரவீந்திர சுதாகர் மற்றும் பிங்கேஷ் ஆர்.ஷா ஆகிய 4 பேருக்கும் பங்குச் சந்தையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
SEBI அறிக்கை:
அனில் அம்பானியின் நிறுவனம் விதிமுறைகளின்படி மொத்த அனுமதியளிக்கப்பட்ட அளவை விட வரம்பை மீறி நடந்து கொண்டது தெரிய வந்துள்ளதாக செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Reliance Home Finance நிறுவனத்தில் இருந்து பணத்தை எடுத்ததாக புகார் எழுந்துள்ளதால் தடை விதிக்கப்படுவதாகவும், நிறுவனத்தின் மேலாளர்கள் உள்ளிட்டோரின் கூட்டு முறைகேடுகள் உள்ளிட்டவை காரணமாகவும் இந்த தடை விதிக்கப்படுவதாக செபி விளக்கம் அளித்துள்ளது.