NSE இந்திய தேசிய பங்குச் சந்தை லிமிடெட்டின் புதிய தலைவர்?
BSEயின் தலைமை நிர்வாகி ஆஷிஷ் சௌஹான், இந்திய தேசிய பங்குச் சந்தை லிமிடெட்டின் (NSE) புதிய தலைவராக இருப்பார் என்று செபி தெரிவித்துள்ளது. அவர் ஐந்து ஆண்டுக்காலம் அப் பதவியில் இருப்பார் என்றும் அது தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான விக்ரம் லிமாயே பதவிக்காலம் ஜூலை 16ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
சவுகான் ஐஐடி-பாம்பேயில் மெக்கானிக்கல் இன்ஜினியர் மற்றும் ஐஐஎம் கொல்கத்தாவின் முன்னாள் மாணவர். அவர் 1991 இல் IDBI வங்கியில் தனது பணியைத் தொடங்கினார்.
பிஎஸ்இயில் தனது 10 ஆண்டுகால பணி நவம்பர் மாதம் முடிவடைந்ததும் சவுகான் என்எஸ்இ-யில் பொறுப்பேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பதவியேற்கும்வரை 4 பேர் கொண்ட இடைக்காலக் குழு என்எஸ்இயின் விவகாரங்களைக் கையாளும் என்றும் செபி தெரிவித்துள்ளது..