ரானா கபூருக்கு செபி அனுமதி …
எஸ் பேங்க் நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ரானா கபூர். இவருக்கு சொந்தமான வங்கிக்கணக்குள்,மியூச்சுவல் பண்ட்கள், பங்குகள் முடங்கியிருந்த நிலையில் அவற்றை முடக்க நிலையில் இருந்து விடுவிக்க பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் செபி அமைப்பு ஆணையிட்டுள்ளது. DHFLநிறுவனத்தின் பண மோசடி வழக்கில் ரானா கபூர் கடந்த 2020மார்ச் மாதம் முதல் சிறையில் இருக்கிறார். விதிகளை மீறி சில bondகளை விற்றது தொடர்பாக 2கோடியே 22 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என்று ஏற்கனவே செபி,கபூருக்கு நோட்டீஸ் அளித்தது. 15 நாட்களுக்குள் இதனை செலுத்தவும் கோரப்பட்டது.இந்த நிலையில் கபூரால் கடந்தாண்டு செப்டம்பரில் பணத்தை செலுத்த இயலவில்லை. இதையடுத்து கபூருக்கு சொந்தமான வங்கிக்கணக்குகள், பரஸ்பர நிதி கணக்குகள், பங்குகளை முடக்கப்பட்டன. இது தொடர்பாக ஏற்கனவே தீர்ப்பாயத்தில் இருந்து 50 லட்சம் ரூபாய் கட்ட கபூர் அனுமதி பெற்று சிறு சிறு தவணைகளாக கட்டியுள்ளார். எனவே முடக்க நிலை தப்பியது. எனினும் இது தொடர்பான விசாரணை வரும் நவம்பர் 20ஆம் தேதி வர இருக்கிறது. AT1bondகளை முறைகேடாக பயன்படுத்தியதை அடுத்து அவருக்கு பெரிய தலைவலியை செபி உருவாக்கியது.பல பணக்காரர்களை மிரட்டி எஸ் பேங்கில் At1பாண்டுகளில் முதலீடு செய்ய வைத்திருப்பதாகவும் கபூர் மீது செபி சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது.