நஷ்டத்தை அம்பலப்படுத்திய செபி…
ஸ்டாக் மார்க்கெட்டில் எப்படியாவது பெரிதாக சம்பாதித்து விடமாட்டோமா என்று முதலீடு செய்த பெரும்பாலனவர்கள் கடந்த நிதியாண்டில் தோல்வியை சந்தித்ததாக அதிர்ச்சி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2023 ஆம் நிதியாண்டில் இன்ட்ரா டே எனப்படும் தினசரி வர்த்தகம் தொடர்பாக செபி ஒரு ஆய்வறிக்கை நடத்தியது. அதில் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் 76 விழுக்காடு பேர் நஷ்டத்தை மட்டுமே சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது பத்தில் 7 பேர் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். 30 வயதுக்குட்பட்டோர் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 48 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டில் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்த இளைஞர்களின் எண்ணிக்கை வெறும் 18 %ஆகத்தான் இருந்தது என்கிறது செபியின் ஆய்வறிக்கை. 2023 நிதியாண்டில் 60 வயதை கடந்தவர்களில் இழப்பை சந்தித்தவர்களின் அளவு 53 விழுக்காடாக இருந்துள்ளது. அதுவே 20 வயதுக்கு உட்பட்டவர்கள் இழப்பு விகிதம் 81விழுக்காடாக உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் , பியூச்சர்ஸ் மற்றும் ஆப்சன்களுக்கான எஸ்டிடி வரியை உயர்த்தியுள்ளார். செபி அண்மையில் நடத்திய ஆய்வில் 2023 நிதியாண்டில் டாப் 10 தரகு நிறுவனங்கள் வாயிலாக பங்கு வர்த்தகம் மேற்கொள்ளும் அளவு 69 லட்சமாக உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2019 நிதியாண்டில் இது 15 லட்சமாகவே இருந்தது. 2023 நிதியாண்டில் பெண்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்த விகிதம் 16 %குறைந்திருக்கிறது என்கிறது அந்த புள்ளி விவரம். திருமணம் ஆனவர்கள்
அதிகம் லாபம் சம்பாதிப்பதாகவும், சிங்கிள்கள் நஷ்டத்தை சந்திப்பதாகவும் தெரியவந்துள்ளது. பெரிய நகரங்களில் இருப்பவர்கள் அதிக லாபத்தை சம்பாதிப்பதாகவும், 2 மற்றும் 3 ஆம் தர நகரங்களில் வசிப்போர் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் செபி அறிக்கை விளக்கியுள்ளது.