அதானி நிறுவனம் பற்றி விசாரணையை தொடங்கியது செபி!!
அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் அண்மையில் ஒரு பங்கு வெளியீட்டை ஆரம்பித்து பணம் சேர்ந்ததும் அதனை திரும்பத்தருவதாக அறிவித்தது சர்ச்சையை உலகளவில் ஏற்படுத்தியது. இந்த சூழலில் பங்கு முதலீடு தொடர்பாக மொரீசியஸைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் மற்றும் அதானி குழுமத்தில் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்திய பாதுகாப்பு சட்டங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதுகுறித்து செபி தனது விசாரணையை துவங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விதிகளின்படி பங்குகள் வெளியிடும் நிறுவனமோ அல்லது அதன் உரிமையாளரின் தொடர்போ முதலீட்டாளர்களுக்கு இருக்கக்கூடாது ஆனால் கிரேட் இண்டர்நேஷனல் டஸ்கர் பண்ட் மற்றும் ஆயுஷ்மான் நிறுவனங்கள் விதிகள் மீறி முதலீடு செய்துள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளதால் அது தொடர்பாகவும் செபி விசாரணை நடத்துகிறது. அதானி குழுமம் அடுத்தடுத்து தவறான வகையில் பங்குகளின் மதிப்பை காட்டியுள்ளதாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் இருந்து அதானி ,அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டார். எலாரா மற்றும் மோனார்க் நிறுவனங்களிலும் அதானி குழுமத்துடன் ஏதேனும் விதிமீறிலில் ஈடுபட்டுள்ளனரா என்றும் செபி விசாரிக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான விசாரணை குறித்து நிறுவனங்களின் விவகாரங்களை நிர்வகிக்கும் அமைச்சகம், பிரதமர் அலுவலகத்துக்கும் உடனுக்குடன் தகவல்கள் அளித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அமளி வரை செய்து வரும் நிலையில் அதானி விவகாரம் பெரிய விஷயம் இல்லை என்பது போல நிதித்துறை செயலாளர் சோமநாதன் தெரிவித்துள்ளார்.