IRDAIயின் சிறுமுயற்சி எப்படி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது பாருங்க..
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் காப்பீட்டு திட்டம் எடுத்தால் அவர்களுக்கு சலுகையை IRDAIஅறிவித்துள்ளது. 65 வயதை கடந்தவர்கள் மருத்துவ காப்பீடு செய்யும்போது அவர்களுக்கு பிரத்யேக சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது இதற்கு முன்பு 65 வயதுக்கு மேற்பட்டோரை மருத்துவ காப்பீட்டில் சேர்ப்பது சாய்ஸாக இருந்தது. இது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இணை நோய் உள்ள வயதில் மூத்தவர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
65வயது நபர் ஒரு மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டுமானால் எந்த நோயும் இல்லாதபட்சத்தில் அவர் 10 லட்சம் ரூபாய்க்கு 50 ஆயிரம் ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும், இதே பாலிசியை 55 வயது நபர் 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். துவக்கத்தில் அதிக பிரீமியம் போல தோன்றினாலும் அதற்கு அதிக பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்,
சர்க்கரை நோய் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கான காத்திருப்பு காலம் 4-ல் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் 12 மாதங்கள் கூட சரி என்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் காத்திருப்பு காலம் 8 ஆண்டுகளாக இருந்தது. இப்போது அவை 5 ஆண்டுகளாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் மூத்த குடிமக்களில் அதிகம்பேர் பயனடைவார்கள் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.