நம்ம பணம் எப்படி சீனாவுக்கு போகுது பாருங்களேன்
10 சதுரங்கவேட்டை படம் எடுக்கும் அளவுக்கு ஊர்ல இருக்கும் அத்தனை பித்தலாட்டம் தினசரி இந்தியர்கள் வாழ்வில் சீன நிறுவனங்கள் அறங்கேற்றி வருகின்றனர். சீனாவில் இருந்து பெரிய தொகையை இந்தியர்களுக்கு அளித்து ஒரு நிறுவனத்தை இந்தியர்கள் பெயரில் தொடங்க வைக்கும் சீனாவின் மோசமான தந்திரம் துவங்குகிறது. அண்மையில் ஓடா கிளாஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. விசாரணையில் பெங்களூருவைச் சேர்ந்த நபரை நிறுவனத்தின் இயக்குநராக அறிவித்துவிட்டு, 82 கோடி ரூபாயை சீனாவுக்கு அனுப்பி வைத்தது அம்பலாமாகியுள்ளது. இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி சொல்லித்தருகிறோம்,ஆன்லைனில் சம்பாதிக்கலாம் என்று வலை விரிக்கும் சீன நிறுவனங்கள், குறிப்பிட்ட தொகை பணம் கிடைத்ததும் தங்கள் வணிகத்தை மூடிவிட்டு நடையை கட்டிவிடுகின்றனர். உடனடியாக கடன் வேண்டுமா என்று கேட்கும் ஊர் பெயர் தெரியாத கடன் செயலிகள் பணத்தை போட்டுவிட்டு பின்னர் அதனை வசூலிக்க வாடிக்கையாளர்களின் ஆபாச படங்களை சித்தரித்து மிரட்டுவதும் அதிகரித்துள்ளது மற்றொரு மோசடி புதுரகம், அதாவது உங்களுக்கு வேலை வேண்டுமா இத்தனை லட்சம் பணம் கொடுங்கள் என்று கேட்கும் நிறுவனங்கள் அக்கவுண்டில் பணம் வந்ததும்,கடையை மூடிவிட்டு நடையை கட்டிவிடுகின்றனர். போன்களில் உங்கள் தரவுகளை திருடும் சீன நிறுவனங்கள் அதனை வைத்து இந்தியாவில் போலியான நிறுவனங்களை மக்களுக்கு தெரியாமலேயே தொடங்கிவிடுகின்றனர்.இந்த மோசடிகளுக்கு பல பட்டய கணக்கர்கள் துணைபோவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் அவர்களிடம் தனித்தனியாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை இந்தியா அண்மையில் தடைவிதித்தது. இது நல்ல அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்களை அடையாளம் காணும்பணிகளும் நடைபெற்று வருகின்றன.ஹவாலா பண மோசடி,வரி ஏய்ப்பு என சாதாரண மனிதர்கள் கற்பனை கூட செய்ய முடியாத அத்தனை கேப்மாரிதனமும் செய்வது சீன நிறுவனங்கள் என்கிறது புள்ளி விவரம். இந்தியர்களை உலவு பார்ப்பதும் அவர்களின் வாடிக்கை என்கிறார்கள் பாதுகாப்பு நிபுணர்கள். முடிந்தவரை பாதுகாப்பாக இருத்தல் நலம் என்பதே இந்த பதிவின் நோக்கமாகும்.