மாசம் 10,000 பைக் விற்கனும்..
பஜாஜ் நிறுவனம் அண்மையில் தனது பார்ட்னரான டிரையம்ப் என்ற வகை மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கை மாதம் தோறும் 10 ஆயிரம் விற்க வேண்டும் என்ற இலக்கு பஜாஜ் விற்பனை பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் நிறுவன அதிகாரிகள் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருக்கின்றனர். அதில் பஜாஜ் நிறுவனத்தின் புதிய பைக்குகள் வரும் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். டிரையம்ப் நிறுவனத்தின் டீலர்கள் 14 முதல் 16 டீலர்களை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ள அவர்கள், இதனை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். பஜாஜ் நிறுவனத்தின் பொருட்கள் 90 நாடுகளில் விற்கப்படுகின்றன. ஆப்ரிக்காவில் விற்கப்படும் 3-இல் ஒரு மோட்டர் சைக்கிள் பஜாஜ் நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது. அண்மையில் பிரிட்டன் நிறுவனமான டிரையம்பும் பஜாஜ் நிறுவனமும் இணைந்து டிரையம்ப் ஸ்பீட் 400 என்ற பைக்கும், 400 எக்ஸ் என்ற மோட்டர் சைக்கிளையும் அறிமுகப்படுத்தினர். கடந்த ஜூலை 5 ஆம் தேதி இந்த அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. 2017ஆம் ஆண்டு முதல் இந்த இருநிறுவனங்களுக்கும் இடையே வணிக ஒப்பந்தம் கையெழுத்திடும் பணிகள் தொடங்கப்பட்டன.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகள் நவம்பர் 23 ஆம் தேதி 3 விழுக்காடு வரை உயர்ந்திருந்தன.