65,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்
இந்திய பங்குச்சந்தைகளில் ஜூலை மாதத்தின் முதல் வர்த்தக நாளில்,மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 65 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை கடந்து சாதனை படைத்திருக்கிறது.வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 486 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 205 புள்ளிகாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 135 புள்ளிகள் அதிகரித்து 19,322 புள்ளிகளை கடந்துள்ளது. மருந்துவத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் கடைசி நேரத்தில் விற்கப்பட்டதால் பங்குச்சந்தைகள் பிற்பகுதியில் சற்று சறுக்கின. ஒரே நாளில் மட்டும் 1லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி முதலீடுகள் கிடைத்தன. Grasim Industries, ITC, BPCL, Reliance Industries, Bajaj Finance ஆகிய நிறுவன பங்குகள் பெரிய லாபத்தை சந்தித்தனர். Bajaj Auto, Power Grid Corp, Sun Pharma, Cipla,டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை வங்கிப் பங்குகள் 1 முதல் 3 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. Mazagon Dock Shipbuilders, SJVN, NTPC, Karnataka Bank, Tata Motors, Suzlon Energy, JSW Steel, L&T Finance Holdings, IOC, IDFC, HDFC, HCL Technologies, Bank of Baroda உள்ளிட்ட 200 வகை பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டன.
பங்குச்சந்தைகள் வலுவான நிலையில் உள்ளதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. இதன் விளைவாக இந்திய சந்தையில் தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 435 ரூபாய்க்கும், வெள்ளி ஒரு கிராம் 75 ரூபாய் 50 காசுகளுக்கும் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 200 ரூபாய் விலை குறைந்து 75 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. இங்கே கூறப்பட்டுள்ள தங்கம்,வெள்ளி விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி,செய்கூலி சேதாரம் சேர்த்தால் தான் வாடிக்கையாளர்கள் கையில் இருந்து தரும் முழு பணத்தின் மதிப்பு தெரியவரும். ஆனால் கடைக்கு கடை இந்த செய்கூலியும், சேதாரமும் மாறுபடும் என்பதால் அது எங்கு குறைவாக உள்ளது என்பதை பார்த்து நகைகளை வாங்குவது புத்திசாலித்தனமாகும். பல ஆண்டுகள் பழகிய நண்பர்களே அவசரத்துக்கு உதவி செய்யத் தயங்குவர் ஆனால் ஒரு கிராம் தங்கத்துக்கு உள்ள மதிப்பே தனிதான்.