இந்திய பங்குச்சந்தை நிலவரம்
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தில் சரிவுடன் இருந்த நிலையில், வர்த்தகத்தை நிறைவு செய்யும் போது, சற்று உயர்வுடன் நிறைவடைந்துள்ளது.
காலையில் சரிவுடன் இருந்த சந்தை, ஐரோப்பிய சந்தைகளும், ஆசிய சந்தைகளும் சற்று அதிகரித்து வர்த்தகம் ஆனதால், மாலையில் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போதைய நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து, 53 ஆயிரத்து 177 புள்ளிகள் என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 18 அதிகரித்து 15 ஆயிரத்து 850 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இதன் படி, நிப்டி, வரும் நாட்களில் சுமார் 16 ஆயிரம் புள்ளிகளை எட்ட வாய்ப்புகள் உள்ளதாகவும், சரியும் பட்சத்தில் 15 ஆயிரத்து 650 புள்ளிகள் வரை குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.