ஏற்றம் கண்ட பங்குச்சந்தை – 60,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்..!!
இந்திய பங்குச்சந்தைகள் 2-ம் நாளாக நல்ல ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.
மத்திய நிதிநிலை அறிக்கை நேற்று(பிப்.1) தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தை நேற்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 848 புள்ளிகளுடனும், நிஃப்டி 227 புள்ளிகள் அதிகரித்தும் நிறைவடைந்தன.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 2-ம் நாளான இன்றும்(பிப்.2) பங்குச் சந்தை நல்ல ஏற்றத்துடன் ஆரம்பமாகின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 696 புள்ளிகள் உயர்ந்து 59,558 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 203 புள்ளிகள் அதிகரித்து 17,780 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிவுற்றன.