பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம்..
இந்திய பங்குச்சந்தைகளில் புதன்கிழமை ஓரளவு ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 106புள்ளிகள்உயர்ந்து, 80ஆயிரத்து747 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 414 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது. ஏதெர் எனர்ஜீஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்று 9% விலை உயர்ந்தன. இதேபோல் டாடா மோட்டர்ஸ் நிறுவன பங்குகள் 4.47%விலை உயர்ந்தன. எம்ஆர்எப் நிறுவன பங்குகளும் 4%விலை உயர்ந்தன.ஏசியன் பெயின்ஸ் 3.50%,HB stockholdings-2% , radico khaitan -5% சரிவைகண்டன. சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 200ரூபாய் விலை குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 600 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரத்து 75 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 111 ரூபாயாகவும், கட்டிவெள்ளி விலை கிலோ 1லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்துடன் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்…
