நந்தன்நீலேகனி தேர்வுக்கு எதிர்ப்பு?
இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக நந்தன் நீலேகனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதால் பங்குதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இன்போசிஸ் நிறுவனத்தின் 43 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் பெங்களூருவில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது இதில் நீலேகனியை இயக்குநர்களில் ஒருவராக தேர்வானார். இதுகுறித்து பங்குதாரர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் 35 விழுக்காடு சில்லறை பங்குதாரர்கள் நீலேகனி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 2019,2022-ல் இவருக்கு எதிராக 1 % வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இவர் இன்போசிஸ் நிறுவனத்துக்கு வந்துவிடுகிறார். எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் இன்போசிஸ் நிறுவனத்தின் போர்டு மீட்டிங்கில் அவர் கட்டாயமாக பணியாற்றி வருகிறார். 2024-ல் மட்டும் நீலேகனி 3-ல் 1 பங்கு மீட்டிங்கை அவர் புறக்கணித்துள்ளதே எதிர்ப்புக்கு காரணமாகவும் கூறப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்தில் எவ்வளவு நாள் நந்தன் இருப்பார் என்று தெரியாத காரணத்தால்தான் அவருக்கு எதிராக வாக்களிப்பதாகவும் முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். கடந்த 2002 மார்ச் மாதம் முதல் கடந்த 2007 வரை இன்போசிஸின் தலைமை செயல் அதிகாரியாக நந்தன் இருந்தார். அதன் பின்னர் ஆதார் நிறுவனத்துக்கு பணியாற்ற சென்றுவிட்டார்.