கடைசி நேரம் கைகொடுத்த பங்குகள்…
செப்டம்பர் 6ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 65,880 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் அதிகரித்து 19,611 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. தொடக்கத்தில் நன்றாக தொடங்கிய சந்தைகள் போகப்போக சரிந்தன. பின்னர்,கடைசி நேரத்தில் பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கியதால் பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. Tata Consumer Products, Divis Laboratories, Bharti Airtel, Cipla, HDFC Bank உள்ளிட்ட நிறுவனங்கள் தேசிய பங்குச்சந்தையில் ஏற்றம் கண்டன.Axis Bank, Hindalco Industries, Tata Steel, ICICI Bank,NTPC உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடுமையாக சரிந்தன.மருந்து, எண்ணெய் மற்றும் வாயுத்துறை பங்குகள்,ஆற்றல் துறை பங்குகள் ஆகியன அரைவிழுக்காடு வரை ஏற்றம் கண்டன.உலோகம்,ரியல் எஸ்டேட்,வங்கித்துறை பங்குகள் 1 விழுக்காடு வரை சரிந்தன.
மும்பை பங்குச்சந்தையில் Syngene International, VS Motor Company, Cupid, APL Apollo Tubes, Polycab India, Sasken Technologies, Persistent Systems, L&T Technology Services, NBCC, Jyoti, உள்ளிட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத ஏற்றங்களை கண்டன. தங்கம் விலை புதன்கிழமை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் விலை குறைந்து 5,530 ரூபாயாக விற்கப்படுகிறது. தங்கம் விலை ஒரு சவரன் 44ஆயிரத்து 240 ரூபாயாக உள்ளது.வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 78 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 78 ஆயிரத்து 500ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் கட்டாயம் 3% ஜிஎஸ்டியும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றையும் சேர்த்தால்தான் முழு விலை தெரிய வரும், ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.