கார்களில் கேன்சரை ஏற்படுத்தும் பொருளா அதிர்ச்சி தகவல்..
சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வறிக்கை என்ற ஆய்வு நிறுவனம் கார்கள் குறித்து ஆய்ந்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் புற்றுநோயை உண்டாக்கும் பல ரசாயனங்கள் கார்களில் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 101 மின்சார கார்கள், எரிவாயு மற்றும் ஹைப்ரிட் வகை கார்களில் கடந்த 2015 முதல் 2022 வரை ஆய்வு செய்யதது. TCIPP என்ற பொருள் 99 விழுக்காடு கார்களில் இருக்கிறதாம். இந்த பொருட்கள் தொடர்ந்து மனித உடலுக்குள் சென்றால் அவை நரம்பியல் மற்றும் இனப்பெருக்க செயல்களை பாதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் கார்களை பயன்படுத்தும் வயது வந்தோரையும் சிறுவர்களையும் இந்த ஆபத்து தாக்குவதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சீட்களில் உள்ள ஃபோம்களில்தான் அதிக நச்சு பொருள்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தீப்பிடிக்காமல் இருக்க கார் சீட்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் நீண்டகாலம் பயன்படுத்தப்பட்டால் அவை புற்றுநோயை கூட ஏற்படுத்தும் என்றும், ஒரு வேளை கார் தீப்பிடித்தால் அதில் இருந்து வெளியேறும் தீ நச்சு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் இதற்காக நச்சு இல்லாத கார் சீட் பொருட்களை பயன்படுத்த அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.