“பிரச்சனை இல்லாம இருக்கணும் சரியா?”
ஊருக்கே லாபத்தை அள்ளி தரும் பங்குச்சந்தைகளே, ஆரம்ப பங்கு வெளியீடு செய்தால் எப்படி இருக்கும். இது சும்மா பேச்சுக்கு சொல்லவில்லை. நிஜத்தில் நடக்கப் போகிறது. தேசிய பங்குச்சந்தை தனது செயல்பாட்டை அதிகரிக்க, ஆரம்ப பங்கு வெளியீட்டை அறிவிக்க இருக்கிறது. இதற்கான அனுமதியை தேசிய பங்குச்சந்தை , செபியிடம் கோரியுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள பங்குச்சந்தை, ஒழுங்குமுறை அமைப்பான செபி, அடுத்த ஒரு ஆண்டில் எந்த தொழில்நுட்ப கோளாறும் ஏற்படக்கூடாது, என்று நிபந்தனை விதித்து உள்ளது. தேசிய பங்குச்சந்தையின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை, வலுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள செபி, தேசிய பங்குச்சந்தைக்கு பல்வேறு அம்சங்களை அறிவுறுத்தியிருக்கிறது.
இன்னும் சட்டரீதியில், என்ன சிக்கல் இருந்தாலும் முதலில் தேசிய பங்குச்சந்தை தீர்க்க வேண்டும் என்றும், கிடப்பில் கிடக்கும் கோப்புகளின் ஒப்புதல்களையும், சரி செய்யவேண்டும் என்று செபி, கேட்டுக்கொண்டுள்ளது. ஏகப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு,2015 முதல் நிலவி வரும் சூழலில், அதனை சரி செய்ய முடியாமல் தேசிய பங்குச்சந்தை திணறி வருகிறது. 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், வர்த்தகமே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் கடுப்பான செபி, தேசிய பங்குச்சந்தையின் கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தையை, மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரியுமான ஆஷிஷ் குமார் சவ்ஹான் சூளுரைத்துள்ளார். தேசிய பங்குச்சந்தையின் பங்குகள் கடைசியாக 3150 ரூபாய்க்கு பட்டியலிட திட்டமிடப்பட்டு இருந்தது. செப்டம்பருடன் முடிந்த காலாண்டில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 13 விழுக்காடு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் நிகர லாபம் மட்டும் 1999கோடி ரூபாயாக இருக்கிறது. வருமானமாக 3652 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்தாண்டைவிட 24விழுக்காடு அதிகமாகும். இன்ட்க்ஸ் சேவைகள், டேட்டா சேவைகள் மற்றும் கூட்டு இட சேவைவசதிகளை தேசிய பங்குச்சந்தை செய்து வருகிறது.