அடித்துக்கொள்ளும் சிம்கார்டு நிறுவனங்கள்
அதீத கடனில் சிக்கித்தவித்து வரும் வோடஃபோன் நிறுவனம் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க படாதபாடு பட்டு வருகிறது. அந்நிறுவன வாடிக்கையாளர்கள் கொத்தாக ஜியோவும்,ஏர்டெலும் பிடுங்கிக்கொண்டனர் என்றே சொல்ல வேண்டும், அந்தளவுக்கு அத்தனை போட்டிகளை இந்த 3 நிறுவனங்களும் சந்தித்துள்ளன. போஸ்ட்பெயிடு சிம்கார்டுகளை வைத்திருக்கும் இந்த நிறுவன வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அது பெரிய லாபத்தை நிறுவனங்களுக்கு தருகின்றன. இந்த விவகாரத்தில் வோடஃபோன் ஐடியா எனப்படும் வி நிறுவனம் இன்னும் கூட சற்று தாக்கு பிடிக்கும் நிலையில், அதனை காலி செய்ய ஜியோவும்,ஏர்டெலும் காய் நகர்த்தி வருகின்றன. வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய பயணிகளை கவரும் வகையில் ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ஒரு பிளானை வைத்துள்ளது. அந்த பிளானுக்கு ரீசார்ஜ் செய்தால் 184நாடுகளுக்கு சென்றாலும் பெரிதாக பில் வராது. இதே பாணியைத்தான் ஜியோவும் கையில் எடுத்துள்ளது. விமானத்திற்குள் இருந்தபடியே பேசும் வசதியும் விரைவில் வர இருக்கிறது. இந்த போட்டியில் நீடிக்க வேண்டுமானால் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்த வி நிறுவனம் ,29 பிரதான நாடுகளில் பயன்படுத்தும் வகையில் புதிய பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.