ஐயா இதுக்குமேல தாங்க முடியாதுங்க!!!!
வீடுகள் விற்பனை தொடர்பான அனைத்து தரவுகளும் ஒரே குடையின்கீழ் கிடைக்கும் அமைப்பாக CREDAI இருக்கிறது. இந்த அமைப்பு ரிசர்வ் வங்கிக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது. அதில் இந்தியாவின் பெரும்பாலன நகரங்களில் வீடுகளின் விற்பனை கணிசமாக சரிந்துள்ளது என்றும், வரும் நிதி கொள்கை கூட்டத்தில் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மே 2022-ல் 4 விழுக்காடாக இருந்த கடன்களுக்கான வட்டி விகிதம் தற்போது ஆறரை விழுக்காடாக அதிகரித்துள்ளது.விலைவாசியை கட்டுப்படுத்த எடுத்த ரிசர்வ் வங்கியின் முடிவுகள் வீட்டு விற்பனைக்கு பாதகமாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. ஏற்கனவே உற்பத்தி விலை, கட்டுமானப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் கட்டிய வீடுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. முதல்தர நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை கடன்களின் வட்டி விகிதம் பாதிக்கும் என்றும் கிரெடாய் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.