மந்தமான சந்தை..!!!
ஆகஸ்ட் 22ஆம்தேதி இந்திய சந்தைகளில் பெரிய மாற்றம் காணப்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வெறும் 3 புள்ளிகள் உயர்ந்து 65,220 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 19,396 புள்ளிகளிலும் வணிகத்தை நிறைவு செய்தன.பகல் முழுவதும் நன்றாக சென்ற வணிகம்,கடைசி நேரத்தில்சிவப்பாக மாறியது. Hero MotoCorp,Adani Enterprises, HDFC Life, ITC, NTPC உள்ளிட்ட நிறுவனங்கள் நல்ல லாபத்தை பதிவு செய்தன. PCL, Cipla, Bajaj Finserv, Eicher Motors,TCSஉள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. தகவல் தொழில்நுட்பம்,மருந்து மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைத் தவர்த்து மற்றத்துறை பங்குகள் சிறப்பாக இருந்தன. Bharat Forge, Bharat Heavy Electricals, Eveready Industries, 63 Moons Technologies, Lemon Tree Hotels, Escorts Kubota, Trent, Thomas Cook, Emami, Brigade Enterprises, Salzer Electronics, Praj Industries, Welspun India, Kalyani Forge, South Indian Bank, NBCC, Minda Corporation, Linde India உள்ளிட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. தங்கம் விலையை பொருத்தவரை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 43 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் உயர்ந்து 5,460 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் அதிகரித்து, 78 ரூபாயாக இருக்கிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரத்து 300 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலையானது வரிகள்,செய்கூலி சேர்க்கப்படாதது. இங்கே குறிப்பிட்டுள்ள பணத்துடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், செய்கூலி சேதாரமும் சேர்க்கப்படவேண்டும்,ஜிஎஸ்டி அனைத்து கடைகளிலும் 3 விழுக்காடுதான், அதேநேரம் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.