இப்ப தயாரானது சின்ன அல்வா..விரைவில் பெரிசா இருக்குமோ…?
பட்ஜெட் தயாரிப்பது என்பது அத்தனை எளிய காரியம் இல்லை என்பது உண்மைதான், ஆனால் முன்பொரு காலத்தில் காகிகதத்தில் பட்ஜெட் உரை தயாரித்தார்கள். அதற்கான அச்சகங்களுக்கும், அதிகாரிகளுக்கும் பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா கிண்டி தருவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தற்போதும் அந்த மரபை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. பட்ஜெட் தயாராகி முடிந்துவிட்டது என்பதையும், இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது என்பதை குறிக்கும் வகையிலும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாக தயாரிக்கப்பட்டாலும் அங்குள்ள அச்சகத்தில் அல்வா கிண்டும் முறை இன்னமும் தொடர்கிறது. பட்ஜெட் குறித்த ஆவணங்கள் நிதியமைச்சர் படித்த உடன் union budget mobile செயலியில் உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் நிதியமைச்சர், நிதித்துறை இணையமைச்சர், நிதியமைச்சக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கடந்த காலங்களில் எளிய மக்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்ட சூழலில், கடந்த சில ஆண்டுகளாக பெயரளவுக்கு நடுத்தர மக்களுக்கு ஏதும் இல்லாத பட்ஜெட்டாகவே உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த முறையாவது பழைய பிரச்னைகள் களைந்து, ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட் அமையுமா இல்லை, குடியரசு தினத்தன்று கிண்டிய அல்வாவவை பொதுமக்களுக்கும் அளிப்பார்களா என்பதை வரும் 1-ம் தேதி வரை காத்திருந்துதான் தெரிந்துகொள்ள முடியும்.