இந்த ஸ்மால்-கேப் பங்குகளை கொஞ்சம் கவனியுங்கள்!
ஆரியன் புரோ சொல்யூசன்ஸ்
உத்தரப் பிரதேச மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கீழ் இயங்கும் கான்பூர் மெட்ரோ திட்டத்திற்கான சேவை வழங்கும் நிறுவனமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் ஆரியன்புரோ சொல்யூசன்ஸ். இந்த நிறுவனம் என்சிஏம்சி முறையில் நவீன தானியங்கி கட்டணம் சேகரிக்கும் சேவை மற்றும் பராமரிப்பை உள்ளடக்கிய சேவையை 10 வருடத்திற்கு நடத்தி தர வேண்டும். இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் 140 கோடி ரூபாய்.
சபூ சோடியம் குளோரோ
டபுள் டோட்டா டீ மற்றும் ஆயுஷ் டிடர்ஜென்ட் ஆகிய இரண்டு புதிய தயாரிப்புகளை கடந்த ஒரு வருடமாக ஆய்வு செய்து, அதன் எஃப்எம்சிஜி பிரிவு முறையாக அறிமுகப்படுத்துகிறது என்று நிறுவனம் சமீபத்தில் பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்துள்ளது. உற்பத்தியாளர்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட உயர்தர உற்பத்தியுடன், மூலதனம் குறைந்த அடிப்படையில் தயாரிப்புகள் தொடங்கப்படும்.
உப்பு வணிகத்தில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் ஈடுபட்டு வரும் நிலையில், பிராண்டிங் மற்றும் விநியோகத்தில் தற்போதைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் நிதியாண்டு ’23ல் கூடுதலாக 50 கோடியை எதிர்பார்க்கிறது. க்ரஸ்ட் வென்ச்சர்ஸ், டிசிஎம் லிமிடெட், பிரதாப் ஸ்நாக்ஸ், டிக்ஜாம் லிமிடெட், கோல்ட்ஸ்டோன் டெக்னாலஜிஸ் அண்ட் ஃபுட்ஸ் & இன்ஸ் லிமிடெட் போன்ற ஸ்மால் கேப் பங்குகள் இன்று 52 வார உயர்வை எட்டியுள்ளன.