ருச்சி சோயாவின் FPO SMSes – நிறுவனத்தால் தரப்படவில்லை..!!
ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், அதன் ஃபாலோ-ஆன் பொதுப் பங்களிப்பில் (FPO) முதலீடுகள் தொடர்பான SMS-கள் நிறுவனம் அல்லது அதன் விளம்பரதாரர்களால் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் தனது ரூ. 4,300 கோடி ஃபாலோ-ஆன் பொது வழங்கலில் (FPO) பங்கு பெற்ற முதலீட்டாளர்களுக்கு எஸ்எம்எஸ்கள் மூலம் தங்கள் ஏலத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ருச்சி சோயா, விளம்பரத்தில், ஏலத்தை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் புதன்கிழமை என்று கூறியுள்ளது. FPOவில் வெளியிடப்படும் புதிய பங்குகளை பட்டியலிடுவதற்கான காலவரிசையையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த காலக்கெடுவின்படி, புதிய பங்கு ஏப்ரல் 8-ம் தேதி அல்லது அதற்கு அடுத்ததாக பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ருச்சி சோயாவின் பங்கு விற்பனையைக் கையாளும் மூன்று முதலீட்டு வங்கியாளர்களுக்கு செபி எழுதிய கடிதத்தில், “தவறான, மோசடி”யான எஸ்எம்எஸ்களின் உள்ளடக்கங்கள் உள்ளன என்று தோன்றுவதாகவும், ICDR விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்றும் கூறியுள்ளது.
திங்களன்று ருச்சி சோயாவின் பங்குகள் 6 சதவீதம் சரிந்து ரூ.815-ஆக முடிவடைந்தன. நிறுவனம் அதன் எஃப்.பி.ஓ-வை ரூ.615 மற்றும் ரூ.650 என்ற வரம்பில் விலை நிர்ணயித்துள்ளது . இது கடந்த காலத்தை விட 20 முதல் 25 சதவீதம் குறைவு.
ருச்சி சோயாவில் பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி ஆயுர்வேத் 98.9 சதவீதத்தை வைத்திருக்கிறது, அதே சமயம் 1.1 சதவீதம் மட்டுமே பொதுமக்களிடம் உள்ளது. FPO ஐத் தொடர்ந்து, பதஞ்சலியின் பங்குகள் 81 சதவீதமாகக் குறையும், அதே நேரத்தில் பொது பங்குகள் 19 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.