BACk அடித்த SNAPDEAL நிறுவனம்!!!!
இந்திய அளவில் மின் வணிகத்தில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ஸ்னாப்டீல் நிறுவனம். 152 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆரம்ப பங்கு வெளியீட்டை அந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் அது தொடர்பான ஆவணங்களை திரும்பப் பெற இருப்பதாக ஸ்னாப்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் இது தொடர்பான அறிவிப்பை ஸ்னாப்டீல் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதற்கு இந்திய பங்குச்சந்தைகளில் அமோக வரவேற்பு கிடைத்தது. தொழில்நுட்பம் சார்ந்த பங்குகளை விற்க இது சரியான தருணம் இல்லை என்று கருதிய ஸ்னாப்டீல் நிறுவனம் செபியிடம் இது தொடர்பாக அறிக்கை அளித்துள்ளது. ஒரு காலகட்டத்தில் அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக இருந்த ஸ்னாப்டீல் நிறுவனம் தொடர் இழப்புகளை சந்தித்து தோல்வியை சந்தித்தபோது, பங்குச்சந்தை முதலீடுகள் கைகொடுத்தன.
152 மில்லியன் மதிப்புள்ள நிதியை திரட்டி வரும் ஸ்னாப்டீல் நிறுவனம் அதற்கு நிகராக 30.8 மில்லியன் பங்குகளை விற்க முடிவெடுத்துள்ளது.