பதுங்கும் அதானி!!! அடுத்து என்ன?
இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள சத்தீஸ்கரில் அதானி பவர் நிறுவனம், தனது நிறுவன வளர்ச்சிக்காக 850 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் நிலக்கரி சுரங்கத்தை வாங்க திட்டமிட்டது. ஆனால் திடீரென வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கையின் காரணமாக அதானி குழுமம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. இதனால் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் திட்டத்தை அதானி பவர் நிறுவனம் கைவிட்டுள்ளது. டிபி பவர் என்ற நிறுவனம்தான் நிலக்கரியில் இருந்து 1புள்ளி 2 ஜிகாவாட் அனல்மின்நிலையத்தில் உற்பத்தி செய்து வருகிறது. 70.2 பில்லியன் ரூபாய் மதிப்பில் இந்த ஆலையை வாங்க அதானி குழுமம் அதீத ஆர்வம் காட்டி வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கொக்கி போட்ட அதானி குழுமம் அதற்கான பணிகளை செய்து வந்தனர். அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை தகர்ந்து,அதானி குழுமம் பெரிய பாதிப்பை சந்தித்து சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதானி குழும சொத்து மதிப்பு பாதியாக சரிந்துவிட்ட சூழலில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அனைத்து பணிகளையும் அதானி குழுமம் செய்து வருகிறது.