பொதுத்துறை வங்களில் இவ்வளவு நஷ்டமா?
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நஷ்டத்தை சந்தித்துள்ளன என்ற பட்டியலை இந்திய பொதுத்துறை நிறுவனமான CPSE வெளியிட்டுள்ளது. அதில் இந்திய பொதுத்துறை வங்கிகளின் இழப்பு மட்டும் ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சரான பாக்வாத் கராத் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். அதில் இந்தியாவில் 248 பொதுத்துறை நிறுவனங்கள் அதில் 2017-18ம் ஆண்டில் 72 நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்ததாக கூறப்பட்டது. 2018-19ம் ஆண்டு காலகட்டத்தில் இது 69 ஆக சரிந்ததாக கூறியுள்ளார். 2019-20 காலகட்டத்தில் இது 84 ஆக ஆனதாக கூறியுள்ளார். 2020-21-ல் 76 ஆக சரிந்ததாகவும், 2021-22-ல் இது 59 ஆகசரிந்ததாக கூறியுள்ளார்.மொத்த நஷ்டத்தில் கடந்த ஆண்டு கணிசமாக குறைந்து 14 ஆயிரத்து 586 கோடியாக சரிந்துள்ளதாக கூறியுள்ளார். 2019-20 காலகட்டத்தில் இந்த தொகை 44 ஆயிர்த்து 239 கோடியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.