பேடிஎமில் இருந்து வெளியேறிய சாஃப்ட்பேங்க்..
இந்தியாவில் பிரபல ஆன்லைன் பேமண்ட் செயலியாக திகழும் பேடிஎம் நிறுவனத்தில் இருந்து ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங் நிறுவனம் வெளியேறுயுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரையுள்ள தரவுகளின்படி, SVFஹோல்டிங்க்ஸ் நிறுவனம் என்ற நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தில் வைத்திருந்த 1.4 விழுக்காடு பங்குகளையும் விற்றுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் முதல் சாஃப்ட் பேங்க் நிறுவனம், பேடிஎம்மில் இருந்த பங்குகளை படிப்படியாக விற்று வருகிறது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் வரை 1.4 விழுக்காடு பங்குகளை மட்டுமே சாஃப்ட்பேங்க் நிறுவனம் பேடிஎம்மில் வைத்திருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு பேடிஎம் நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியீடு செய்யும்போது அப்போது, சாஃப்ட் பேங்க் நிறுவன பங்குகள் 18.5 விழுக்காடாக இருந்தது. ஏற்கனவே பிபி ஃபின்டெக் என்ற நிறுவனத்தில் இருந்தும் சாஃப்ட் பேங்க் நிறுவனம் வெளியேறியுள்ளது. இந்த பிபி ஃபின்டெக் நிறுவனம்தான் காப்பீட்டுத்துறையில் தனித்துவமாக இருக்கும் பாலிசிபசார் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை சாஃப்ட் பேங்க் நிறுவனம் முதலீடு செய்திருந்தது. பின்னர் அதில் இருந்து படிப்படியாக சாஃப்ட் பேங்க் பின்வாங்கியது. இதே நேரம் சிங்கப்பூர், ஹாங்காங்கில் பிரபலமான டிரீலைன், யூபிஎஸ் பிரின்சிபல் உள்ளிட்ட நிறுவனங்கள் பேடிஎம்மில் 1.18 மற்றும் 1.08 விழுக்காடு பங்குகளை முறையே முதலீடு செய்திருக்கின்றனர், ஒட்டுமொத்த வெளிநாட்டு முதலீடுகளும் 39.77% -ல் இருந்து 37.77%ஆக சரிந்துள்ளது. இதே நிறுவனத்தில் பரஸ்பர நிதி முதலீடு 6.86 -ல் இருந்து 7.15% ஆக உயர்ந்திருக்கிறது.