கடனை வாங்க நிர்பந்தம்..
அதிகரித்து வரும் பணவீக்கம் மக்களை அதிகம் கடன் வாங்க தூண்டுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களின் செலவு அதிகரித்தபடியே இருக்கிறது ஆனால் மார்கெட்டிங் உள்ளிட்ட சில துறைகளில் பணியாற்றும் பணியாளர்களின் சம்பளம் மட்டும் பல ஆண்டுகளாக உயர்ந்தபாடில்லை.
இது மக்களை மேலும் கடன் வாங்க அதிகம் தூண்டுகிறது. மக்கள் மத்தியில் உள்ள சேமிப்புகளும், கணிசமாக கரைந்து வருகின்றன. சில்லறை கடன் மிக மிக அதிகமாக இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமானால் சில்லறை கன் கடந்த 6 ஆண்டுகளில் 30விழுக்காடு உயர்ந்திருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிந்த காலகட்டத்தில் வங்கிகள் வழங்கிய கடன்களைவிட அதிக அளவாக 51.7லட்சம் கோடி ரூபாய் சில்லறை கடன்கள் நாட்டில் வழங்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறையில் மட்டுமே சம்பளத்துக்கும் பணவீக்கத்துக்கும் இடையேயான வித்தியாசம் சீராக இறுக்கிறது. அதே நேரம் உற்பத்தி துறை சார்ந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது பணவீக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அளவிலேயே இருக்கிறது என்கிறது பங்குச்சந்தைகளின் கள நிலவர புள்ளிவிவரங்கள். 2018ஆம் ஆண்டுக்கு பிறகு, பணவீக்கம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியிருக்கிறது. சரியாக சொல்லவேண்டுமானால் 3.6% முதல் 6.7%ஆக பணவீக்கம் உயர்ந்திருக்கிறது.
தனியார் நிறுவனங்களில் சம்பளமாக தரும் தொகைகளின் அளவு ஒற்றை இலக்கத்திலேயே இருக்கிறது.
இந்தியாவில் சில்லறை பணவீக்கம் என்பது 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது 2022-ல் 7.8%ஆக உயர்ந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் ஊழியர்களின் சம்பளம் மட்டுமே 49.9%ஆக இருக்கிறது. இது 2018-இல் 49.1%ஆக இருந்தது. தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ளோர் கடன்களை சீராக பராமரித்து வருவகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு சம்பள உயர்வைும் சரியாக பயன்படுத்தி வருகின்றனர் என்கிறது தரவுகள், செலவுகளை குறைப்பதிலும் அவர்கள் திறமை கொண்டுள்ளனர். கடன்களில் கிரிடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்கள்தான் அதிகம் உள்ளதாம். கடன் அட்டைகளை பயன்படுத்தி விலையுயர்ந்த செல்போன்களை வாங்கவும்,சுற்றுலா செல்லவும் பெரிய தொகைகள் செலவு செய்யப்படுகிறதாம்.
கடன் வாங்கி திருமணம் செய்வதும் இதில் அடங்குகிறதாம். 50 ஆயிரம் ரூபாய் வரையுள்ள கடன்களி்ல் இப்போது வாங்கிக்கொண்டு பிறகு கடனை திருப்பி செலுத்தும் திட்டங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
2030ஆம் ஆண்டு இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த கடன்கள் இன்னும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கணிக்கின்றனர். வருவாய் குறைவு, செலவு அதிகரிப்பு ஆகிய இரண்டும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
சமூக பாதுகாப்பு இல்லாத நாடுகளில் நிதிச்சுமை அதிகரிக்கும் என்பதும் நிதர்சனமாக இருக்கிறது.