ஓரளவு சமாளித்த இந்திய சந்தைகள்
அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரம் வெளியிடப்பட இருக்கும் சூழலில் அதற்கு முன்பாக இந்திய பங்குச்சந்தைகள் சிறப்பான வர்த்தகத்தை நடத்தின. தனியார் வங்கிகள்,ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 178 புள்ளிகள் உயர்ந்து 61ஆயிரத்து940 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 49 புள்ளிகள் அதிகரித்து 18 ஆயிரத்து 315 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இண்டஸ் இன்ட் வங்கி அதிகபட்சமாக 2 விழுக்காடு லாபம் பதிவு செய்தது.யூபிஎல் நிறுவனம் 2 விழுக்காடு சரிவை பதிவு செய்தது. இந்திய பங்குச்சந்தை நிலைமை இப்படி இருக்கையில், தங்கம் விலை மேலும் உயர்ந்து 5 ஆயிரத்து 742க்கும் ஒரு சவரன் 45 ஆயிரத்து936 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகளும்,கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி ஒரு கிராம் 82 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ 82 ஆயிரத்து 700 ரூபாயாகவும் இருக்கிறது. இந்த விலையுடன் முதலில் 3விழுக்காடு ஜிஎஸ்டி சேர்க்கவேண்டும் பின்னர் ஒவ்வொரு கடைக்கும் தகுந்தபடி செய்கூலி,சேதாரம் உயரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.