ஆசிரியர் தினத்தில் அமோகம்..!!
செப்டம்பர் 5ஆம் தேதி இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 152 புள்ளிகள் உயர்ந்து 65,780புள்ளிகளாகவும்,தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46 புள்ளிகள் அதிகரித்து 19,574புள்ளிகளாகவும் உயர்ந்து வர்த்தகமாகிறது. துவக்கத்தில் சற்று தடுமாறிய சந்தைகள் ,சீரான இடைவெளியில் ஏற்றத்தை பதிவு செய்துள்ளன. தேசிய பங்குச்சந்தையில் Apollo Hospitals, Coal India, Sun Pharma, BPCL, Bajaj Auto உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. UltraTech Cement, SBI Life Insurance, Dr Reddy’s Laboratories, Maruti Suzuki, Eicher Motors உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. வங்கித்துறை பங்குகள் சரிவை கண்டன.RITES, Phoenix Mills, ITI, Bharat Forge, Coforge, Vindhya Telelinks, IRFC, ONGC, Samvardhana Motherson International, TV18 Broadcast, Shalby, Tribhovandas Bhimji Zaveri, Oberoi Realty உள்ளிட்ட 350 பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டன. தங்கம், வெள்ளி விலையும் இன்று குறைந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கம் 120 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து 5545 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 79 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 79 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரமும் சேர்த்தால்தான் தங்கம்,வெள்ளியின் இறுதி விலை தெரிய வரும்,இந்த விலையில் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.