இந்தியாவின் சீனாவுடனான ஏற்றுமதி குறைந்தது
சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை இந்த ஆண்டும் தொடர்கிறது என்று வர்த்தக அமைச்சகத்தின் தரவு காட்டுகிறது.
2021-22 நிதியாண்டில் (FY22), வர்த்தகப் பற்றாக்குறை $72.9 பில்லியனாக பதிவு செய்யப்பட்டது, இது FY21 இன் $44 பில்லியனில் இருந்து கிட்டத்தட்ட $29 பில்லியன் அதிகமாகும். 2020-21ல் வர்த்தக பற்றாக்குறை 48.6 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது.
ஏன் இந்தப் பற்றாக்குறைகள்?
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பெரும்பகுதியாகும். உற்பத்தித் துறையில் இந்தியா வளர்ச்சி கண்டு வருவதால், இதுபோன்ற ரசாயனங்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் மருந்துத் துறையானது மருந்துகள் மற்றும் பிற மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு சீனாவிலிருந்து வரும் மூலப்பொருட்களை பெரிதும் நம்பியுள்ளது.
இதுபோன்ற காரணங்களினால் சீனா இறக்குமதி அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், ஏற்றுமதி குறைந்துள்ளது, இது அதிக வர்த்தக பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.