கடும் சரிவில் இலங்கை பொருளாதாரம் – மீட்டெடுக்க முயற்சி..!!
இந்திய முதலீடுகளை ஈர்க்க விரும்பும் இலங்கை:
இந்தியாவில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக எரிசக்தி, சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார கட்டம், துறைமுகங்கள், ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சியிலிருந்து இலங்கை பயனடைய விரும்புகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை இந்திய பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே தங்களுடைய விருப்பம் என்றும் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.
இலங்கைத் தூதர் மிலிந்த மொரகொட தகவல்:
இந்திய எரிசக்தித் துறையுடன் ஒருங்கிணைக்க திருகோணமலை எண்ணெய் நிறுவனத் திட்டம் வழிவகுக்கும் உறுதியான முயற்சிகளில் ஒன்றாகும், மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான தேவை இலங்கைக்கு இருப்பதாகவும், அந்தத் துறையில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பை எதிர்நோக்குவதாகவும் மொரகொட குறிப்பிட்டுள்ளார்.
ITC தனது மிகப்பெரிய சொகுசு ஹோட்டலை கொழும்புவில் அமைக்கிறது. ரியல் எஸ்டேட் மற்றும் துறைமுகத் துறைகள் போன்ற சுற்றுலாத் துறையில் இந்திய முதலீடுகளை இலங்கை எதிர்ப்பார்க்கிறது என்றும் மொரகொட விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் டிஜிட்டல் இணைப்பை எளிதாக்குவதே இலக்காகும். அண்டை நாடுகளுக்கு இடையே கடல் மற்றும் வான்வழி இணைப்பை அதிகரிக்கவும் இது உதவும். இந்திய முதலீடுகளை அதிகரிப்பதற்கும். இலங்கையில் நடைபெற்று வரும் பெரிய அளவிலான பொருளாதார அபிவிருத்தி மற்றும் முதலீட்டு உந்துதல் சார்ந்த திட்டங்களுக்கு வசதி செய்வதற்கும் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்கவும், இந்தியாவில் இலங்கையின் சந்தைப் பங்கை விரிவுபடுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.