சைவ இறைச்சி நிறுவனம் – கோலி, அனுஷ்கா முதலீடு..!!
தாவரத்தை அடிப்படையாக கொண்டு இறைச்சி தயாரிக்கும் மும்பையை சார்ந்த நிறுவனத்தில் விராட் கோலி, அனுஷ்கா தம்பதியினர் முதலீடு செய்துள்ளனர்.
இறைச்சிக்கு மாற்றாக சைவஇறைச்சி:
பட்டாணி, சோயாபீன், பருப்பு, தானியங்கள் மற்றும் புரதங்கள், வைட்டமின்கள் உள்ளிட்டவைகளால் இறைச்சிக்கு மாற்றாக பிற சைவ பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. இன்றைய Modern உலகில் தற்போது சைவ இறைச்சி(Plant Based Meats) என்று அழைக்கப்படும் தாவரத்தை கொண்டு உற்பத்தி செய்யப்படும் இறைச்சி உணவுகள் அனைவராலும் விரும்பப்பட்டு வருகிறது. இறைச்சி உண்ணாதவர்கள் இந்தவகை சைவ இறைச்சியை விரும்பத் தொடங்கியுள்ளனர்.
Blue Tribe Foods:
Blue Tribe Foods சந்தீப் சிங் மற்றும் நிக்கி அரோரா சிங் ஆகியோரால் 2019 இல் இணைந்து நிறுவப்பட்டது. தலைமை தொழில்நுட்ப அதிகாரி டாக்டர் நவ்நீத் சிங் தியோரா, செஃப் மற்றும் ஆலோசகர் நிர்வான் தாக்கர், மற்றும் தலைமை வணிக அதிகாரி சோஹில் வசீர் ஆகிய முக்கிய குழு நிறுவனர்களை உள்ளடக்கியது.
சைவஇறைச்சி நிறுவனத்தில் விராட் முதலீடு:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, அனுஷ்கா தம்பதியினர், மும்பையில் உள்ள Blue Tribe Foods என்ற Start-Up நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
அனுஷ்கா, விராட் கருத்து:
எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றும் முயற்சியில் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த விராட் கோஹ்லி “இறுதியில், நானும் ஒரு உணவுப் பிரியனாக இருக்கிறேன். நிறைய பேர் அப்படித்தான் உணர்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இறைச்சியை நாம் குறைவாகச் சார்ந்து இருக்க முடிந்தால், நமது சுவை மொட்டுகளை சிறிதும் மாற்றாமல், பூமியை மாற்றும் தாக்கத்திற்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு பாலிவுட் திரை நட்சத்திரங்களும் இதேபோல் சைவ இறைச்சி தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.