ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவது கடினமாக இருக்கக்கூடும்
மூலதன நெருக்கடியை எதிர்கொள்வதால், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்து வரும் மாதங்களில் நிதி திரட்டுவது கடினமாக இருக்கும்.
இந்தியாவில் மெட்டாவின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜித் மோகன் கூறுகையில், மூலதனத்தை அணுகுவது கடினமாக இருக்கும் நாட்கள் வரவுள்ளன என்றார்.
கடந்த இரண்டு வருடங்களில் காணப்பட்ட காட்சியை ஒப்பிடும்போது திறமைக்கான போட்டி சற்று குறைவாக இருக்கும் என்று மோகன் எதிர்பார்க்கிறார்.
Kalaari Capital’s நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் வாணி கோலா இதுபற்றித் தெரிவிக்கையில் ”வாடிக்கையாளர்கள் தங்கள் வாங்குதல் முடிவுகளை ஒத்திவைக்கலாம். மற்றும் மாற்று வழிகளைத் தேட வேண்டும்” என்று கூறினார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகப் பிரிவில் முதலீட்டுத் தொழில்களை மேம்படுத்தவும், அவர்களுக்கு சரியான நேரத்தில் வணிகத் திறன் ஆதரவை வழங்கவும், இப்போது கலாரி கேபிட்டலுடன் மெட்டா கைகோர்த்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.