IPO மூலம் ₹1,250 கோடியை திரட்ட முற்படும் வேதாந்தாவின் “ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன்”! எதிர்காலத் திட்டம் என்ன?
வேதாந்தா குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வால் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமான “ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன்”, IPO மூலம் ₹1,250 கோடி வரை திரட்டும் நோக்கில் தனது வரைவு தகவல் தொகுப்பான “ரெட் ஹெர்ரிங் ப்ரொஸ்பெக்ட்ஸ்” தொகுப்பினை சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் தாக்கல் செய்துள்ளது.
இந்த வரைவு தகவலின்படி முதற்கட்ட பங்கு வெளியீட்டில் ரூ. 1250 கோடிகள் வரையிலான ஈக்விட்டி பங்குகளை விற்பனைசெய்யும், இதில் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான பங்கு ஒதுக்கீடும் உள்ளடக்கியது. IPO மூலம் திரட்டப்படும் தொகை இந்த நிறுவனம் மற்றும் இதன் சார்பு நிறுவனமான கார்கோன் டிரான்ஸ்மிஷன் லிமிடெட் பெற்ற கடன்களை திரும்ப செலுத்திட பயன்படுத்தப்படும்.
நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய முன்னணி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை இருவேறு வகைகளாக உள்ளடக்கி, உலகளாவிய உள்கட்டமைப்பு தீர்வகமாக பன்னாட்டளவிலும், பவர் டிரான்ஸ்மிஷன் திட்டங்கள் மற்றும் மின்சார இணைப்பு திட்டங்களை இந்தியாவிலும் செயல்படுத்திவருகிறது.
இதில் முதலாமவது தற்சமயம் இந்தியா மற்றும் பிரேசிலில் மின்சாரம் பரிமாற்ற திட்டங்களை வடிவமைத்து, கட்டமைத்து, செயல்படுத்துகிறது. இரண்டாமவதான தீர்வுகள் வணிக வரிசையில் உற்பத்தி துணைப் பிரிவு உள்ளது, இது அதிக செயல்திறன் கொண்ட மின் கடத்திகள், ஆப்டிகல் கிரவுண்ட் கம்பி மற்றும் கூடுதல் உயர் மின்னழுத்த கேபிள்கள் உள்ளிட்ட பலவகையான தயாரிப்புகளை தயாரித்து வழங்குகிறது.