தயார் நிலையில் “ஸ்டெர்லைட் பவர்” – IPO
செபியின் ஒப்புதலைப் பெற்று, ஸ்டெர்லைட் பவர் ட்ரான்ஸ்மிஸன் நிறுவனம் ஐபிஓ வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது, ரூ.1,250 கோடி மதிப்பிலான புதிய பங்குகளை உள்ளடக்கியதாக இந்த ஐபிஓ இருக்கும், வேதாந்தா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஸன் தனிப்பட்ட சொத்துக்களை வைத்து நிர்வகிக்கிறது.
இந்த நிறுவனம் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் செயல்படுகிறது. இருநாடுகளிலும் செயல்படும் ஒரு முன்னணி தனியார் துறை மின் பரிமாற்ற உள்கட்டமைப்பு நிறுவனமாக ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஸன் இருக்கிறது. உள்கட்டுமானத்துறை, மின்பரிமாற்றத் தீர்வுகள், மின்கோபுரங்கள் மற்றும் கம்பிவழிப்பறிமாற்ற சேவைகளை நிறுவுதலில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஸன் இந்த ஐபிஓ நிதி திரட்டலின் மூலமாக புதிய வளர்ச்சி இலக்குகளைத் திட்டமிடுகிறது.