பங்குச்சந்தையில் தொடரும் வீழ்ச்சி
மே 17ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் பெரிய சரிவை பதிவு செய்தன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 371 புள்ளிகள் சரிந்து 61ஆயிரத்து560 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104 புள்ளிகள் சரிந்து 18ஆயிரத்து181புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தொலைதொடர்பு, சில வங்கித்துறை பங்குகளில் ஏற்பட்ட சரிவே இந்திய பங்குச்சந்தைகளில் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய இந்திய சந்தைகள், பின்னர் கடைசி நேர வர்த்தகத்தில் பங்குகளை அதிகம் விற்றதால் பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை சந்தித்தன. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 670 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 60 காசுகள் குறைந்து 78 ரூபாய் 20 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டிவெள்ளி கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இங்கே கூறப்பட்டுள்ள விலையுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டியும்,செய்கூலியும் சேதாரமும் சேர்க்கவேண்டும், கடைக்கு கடை செய்கூலி சேதாரம் மாறுபடும் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.