15/12/2021 – இறங்குமுகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு 319 புள்ளிகள் குறைந்து 57,798 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 5 புள்ளிகள் குறைந்து 58,122 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 1 புள்ளிகள் குறைந்து 17,324 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 36 புள்ளிகள் குறைந்து 36,930 ஆகவும் வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 58,122.00 | 58,117.09 | (+) 04.91 | (+) 0.008 |
NIFTY 50 | 17,323.65 | 17,324.90 | (-) 01.25 | (-) 0.007 |
NIFTY BANK | 36,929.50 | 36,893.95 | (+) 146.30 | (+) 0.09 |
நேற்றைய சந்தை முடிவில் பவர் கிரிட் கார்ப்பரேஷன், நெஸ்லே இந்தியா, ஆக்சிஸ் வங்கி மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபமடைந்தன, ஐடிசி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை மிகவும் சரிந்த பங்குகள். மின்சாரம், மருந்து மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் லாபத்திலும் ஆட்டோ, எஃப்எம்சிஜி மற்றும் பொதுத்துறை வங்கி குறியீட்டெண்கள் சரிவிலும் முடிந்தது.