லேசாக சரிந்த பங்குச்சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகளில் ஜூலை8 ஆம் தேதியான திங்கட்கிழமை சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்36புள்ளிகள் சரிந்து 79,960புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. சென்னையில் ஜூலை 8 ஆம் தேதி திங்கட்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து விற்பனையானது. 54 ஆயிரத்து 400ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6800 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் விலை உயர்ந்து 99 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோ200ரூபாய் உயர்ந்து 99ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்