மீண்டு எழுந்த பங்குச்சந்தைகள்!!!
வாரத்தின் கடைசி வர்த்தகநாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 297 புள்ளிகள் அதிகரித்து 61ஆயிரத்து729 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 18ஆயிரத்து203 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் 1587 பங்குகள் முன்னேறின,1759 பங்குகள் சரிந்தன.139 பங்குகள் பெரிய மாற்றமின்றி வணிகம் நடந்தது. தகவல் தொழில்நுட்பம்,ஆட்டோமொபைல் மற்றும் வங்கித்துறை பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கியதால் கடைசி நேரத்தில் பங்குச்சந்தைகள் உயர்வில் முடிந்தன. Adani Ports,Adani Enterprise பங்குகள் ஏற்றத்தை கண்டன,டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா மற்றும் இன்போசிஸ் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.Divis Laboratories, Britannia Industries, Tata Consumer Products, NTPC பங்குகள் சரிந்தன. டெக் நிறுவன பங்குகள் ஒன்றரை விழுக்காடு வரை ஏற்றமடைந்த நிலையில், மருந்துத்துறை பங்குகள் கணிசமாக சரிந்தன. பங்குச்சந்தைகள் நல்ல லாபத்தை பதிவு செய்ததைப்போலவே,தங்கத்தின்விலையும் கணிசமாக சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் விலை குறைந்து5 ஆயிரத்து 625 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் 200 ரூபாய் விலை குறைந்து 45 ஆயிரம் ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து78 ரூபாயாக இருந்தது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து 78 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது மக்களை தங்கத்தை வாங்கத் தூண்டியுள்ளது. இங்கே குறிப்பிட்ட தங்கத்தின் விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், செய்கூலியும்,சேதாரமும் சேர்த்தால்தான் நிஜமான தங்கத்தின் விலை கிடைக்கும்,ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கடையில் வெவ்வேறான செய்கூலி,சேதாரம் இருக்கும் என்பதால் சரியான விலை மாறுபடும் என்பதால் இங்கே குறிப்பிடவில்லை. இயன்றவரை தங்கத்தை சேமித்து வைப்போம்,அது ஆபத்துகாலத்தில் பேருதவியாக இருக்கும்.